Tamil Sanjikai

சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், 27 ஆண்டுகளுக்கு பிறகு கோமா நிலையிலிருந்து திரும்பியுள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டின் அல்-ஐன் பகுதியைச் சேர்ந்த முனிரா அப்துல்லா. இவர் 1991ஆம் ஆண்டு, அவரது உறவினர் காரை ஓட்ட, அவரும் அவரது மகன் ஓமரும் பின்இருக்கையில் அமர்ந்து மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சமயத்தில், தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், மகனை கட்டியணைத்துக்கொண்டார் முனிரா. இதில், அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்றார்.

முதற்கட்டமாக அவருக்கு லண்டனில் தொடர் சிகிச்சை தரப்பட்டது. ஆனால், அவர் நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.. தாய் முனிராவுக்கு இப்படி ஆனது, தன்னால் தான் என மகன் ஓமரும் மிகுந்த கவலையில் இருந்தார்.

பின்னர், இந்தத் தகவல் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மானுக்கு தெரியவந்து, அதையடுத்து அவர் நிதியுதவி அளிக்க முன்வந்தார். அதன்படி முனிராவை ஜெர்மன் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பிறகு, அவர் தற்போது கோமா நிலையில் இருந்து திரும்பியுள்ளார். தற்போது முனிரா அனைவரிடமும் சகஜமாக பேசி, பழகி வருகிறார். அவர், கோமாவில் இருந்து திரும்பியது அவரது குடும்பத்தினருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முனிராவின் மகன் ஓமர் கூறுகையில், "எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் காற்றில் மிதப்பது போன்று இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும், சவுதி மன்னருக்கும் முனிராவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த 27 ஆண்டுகளாக உலக நிகழ்வுகள் எதுவும் முனிராவுக்கு தெரியவில்லை. 1991ம் ஆண்டு நடந்த கார் விபத்து தான் அவருக்கு கடைசியாக நியாபகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment