உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது..
சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முன்னதாக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா, டி காக் களமிறங்கினார்கள். ஆம்லா 6 ரன்னிலும், இதையடுத்து களமிறங்கிய மார்க்ராம் 5 ரன்னிலும் காட்ரெல் பந்துவீச்சில் வெளியேறினார்கள்.
தொடர்ந்து, விளையாடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா 7.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. டி காக் 17 ரங்களிலும் , டூப்ளஸ்சி 0 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்தத்தின் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச்சென்றனர்.
0 Comments