தமிழக கேரள எல்லை பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடியில் உள்ள வைத்திரி பகுதியில், நேற்றிரவு தனியார் விடுதி ஒன்றில் புகுந்த மூன்று மாவோயிஸ்டுகள் அங்கு இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் தங்களை பிடிக்க கேரள அதிரடி படை போலீசார் வருவதை அறிந்த அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடியுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பதிலுக்கு மாவோயிஸ்டுகளும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மாவோயிஸ்டு ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். ஒருவனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.
சுட்டு வீழ்த்தப்பட்டவன் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜலீல் என தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments