Tamil Sanjikai

பாஸ்போர்ட் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மந்திரி முரளீதரன் பதிலளித்து பேசினார், அவர் பேசியதாவது:–

‘சாதாரண சூழ்நிலையில் விண்ணப்பித்த 11 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. தட்கல் முறையில், விண்ணப்பித்த சில நாட்களிலேயே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்படுகின்றன. 93 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் மற்றும் 412 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா மையங்களும் உள்ளன. பாஸ்போர்ட் சேவா மையங்களை இயக்குவதில் எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடவில்லை’ என்று கூறினார்.

0 Comments

Write A Comment