Tamil Sanjikai

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலுள்ள ஏ.டிஎம் இயந்திரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்படலாம் என ஏ.டிஎம் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பணமதிப்பு நீக்கத்தின்போது எப்படி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் முன்பு நின்றார்களோ அதே போன்ற நிலை வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது அரசின் புதிய விதிகளின்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான மானியம் நேரடியாக வங்கிக்கு செல்கிறது. இதனால், ஏ.டி.எம் சேவையை மக்கள் சார்ந்திருப்பதும் அதிகமாகிறது. இந்நிலையில் , ஏ.டி.எம்-கள் மூடப்பட்டால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள்.

இன்றும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை.கிரெடிட்-டெபிட் கார்டுகள் மூலம் நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பணம் எடுக்கும் ஏ.டி.எம்-களுக்கு பின்னால் விரிவான தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை இயங்குகிறது. இயந்திரங்களை தயார் செய்வது, அதனை நிறுவி, செயல்படுத்தும் நிறுவனங்கள், ஏடிஎம்-ல் பணம் போடுபவர்கள் மற்றும் ஏ.டி.எம்களுக்கு வெளியே இருக்கும் காவலர்களும் இதில் அடங்குகிறார்கள் .

மக்களைச் சுற்றி இருக்கும் ஏடிஎம்கள் அனைத்தும் தொழில்முறையில் ஒரே மாதிரியானது அல்ல. ஏடிஎம்-கள் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்-களை ஒரு வேளை வங்கிகளே அதனை நிர்வகிக்கும் அல்லது ஏ.டி.எம் தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்களுக்கு கீழ் குத்தகைக்கு விட்டுவிடும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கமிஷன் தருவதற்கு ஏற்ப, ஏ.டி.எம்-கள் வழங்குவதற்காக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதில் எந்த மாதிரியாக இருந்தாலும், இயந்திரங்களுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பு வங்கிகளுக்கானது தான்.

2013-ஆம் ஆண்டில், வங்கிகளுக்கு ஏ.டி.எம் சேவை வழங்கும் உரிமத்தை சில நிறுவனங்களுக்கு வழங்கியது. அவர்கள் சொந்தமாக ஏ.டி.எம் இயந்திரங்களை நிறுவி, கமிஷன் அல்லது ஏ.டி.எம் பரிமாற்ற கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த மாதிரியில், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனம் தேர்வு செய்வது , வாடகைக்கு எடுப்பது, பார்த்துக் கொள்வது, இயந்திரங்களில் பணம் போடுவது மற்றும் பிற வேலைகளுக்கு பொறுப்பாகும்.

இந்திய தேசிய கட்டண நிறுவம் மற்றும் ஆர்.பி.ஐ விவாதித்த பின்னர், பரிவர்த்தனைகளுக்கு வங்கி மூலம் வழங்கப்படும் கமிஷன் குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில், இந்த கமிஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஏ.டி.எம் இயந்திரங்களை செயல்பாட்டில் வைப்பதற்கான செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிகிறது . ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ஏ.டி.எம் கூட்டமைப்புக்கு 15 ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. ஆனால், தற்போது அதனை விட செலவு அதிகமாகிவிட்டது. தற்போது அரசு மற்றும் ஆர்.பி.ஐ கொண்டுவர உள்ள பல புதிய விதிகளால், செலவுகள் மேலும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

அரசு மற்றும் ஆர்.பி.ஐ-யின் புதிய விதிகளை தொடர்ந்து , ஏ.டி.எம் தொழில் இழப்புகளை சந்தித்து வருவதாக தெரிகிறது. இன்னும் அழுத்தம் அளித்தால், சிறு நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் 1.13 லட்ச ஏ.டி.எம்களை மூடும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில், ஏ.டி.எம்-களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கூடிய பாதுகாப்புகள் வழங்குவது தொடர்பாக பல விதிகளை உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இதையெல்லாம் செயல்முறைப்படுத்த ஏடிஎம் தொழிலுக்கு குறைந்தது 3,500 கோடி ரூபாய் தேவைப்படும் என்று ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பை தொடர்ந்து ஏ.டி.எம் இயந்திரங்கள் மாற்றப்பட்ட நிலையில், இது மிகவும் அதிகம் என்றும் அக்கூட்மைப்பு தெரிவிக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் 2,38,000 ஏடிஎம்-கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்தாண்டு எத்தனை ஏ.டி.எம் செயல்படும் என்று இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

0 Comments

Write A Comment