சிகிச்சை முடிந்து திரும்பிய தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திடம், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு. நேரில் சென்று நலம் விசாரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளில் தே.மு.தி.க. ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று விஜயகாந்த்தை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூட்டணி குறித்து பேசியதாக சூசகமாகத் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்திப்புக்கும் அரசியல் முக்கியத்துவம் இருக்கக் கூடும் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, விஜயகாந்த் உடனான சந்திப்பின் போது துளி கூட அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தார்.
0 Comments