Tamil Sanjikai

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த பல மாதங்களாக உடல்நலக்குறைவால் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இவரது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43-வது அதிபராக இருந்தவர்.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரான புஷ், சீனாவுக்கான தூதர் பொறுப்பேற்று அரசு நிர்வாகத்தில் நுழைந்தார். 8 வருடம் துணை அதிபராக இருந்த அவர் அந்நாட்டின் 41-வது அதிபராக பொறுப்பேற்றார். அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் புஷ் பொறுப்பு வகித்துள்ளார். புஷ் மறைவுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment