சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முகப்பேரை சேர்ந்த சக்திவேல் மற்றும் கவிதா தம்பதியின் மகளான மகாலட்சுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், டெங்குவுக்கு சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments