அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றன. இதில், பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அமெரிக்க அணியை வீழ்த்தியது.
இதேபோல், ஆடவர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ரஷ்ய அணியை 11-3 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வென்றது.இதையடுத்து இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன.
0 Comments