கர்நாடக மாநில இடைத்தேர்தலில் நடந்த 5 தொகுதிகளில் 4 தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 3-ம் தேதி கர்நாடகாவில் ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ராம்நகரம் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டனர். இந்த இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதியில் 2- தொகுதியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி பெற்றுள்ளார். மாண்டியா மக்களவை தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் சிவராமகவுடா, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சிவராமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.
2 எம்.எல்.ஏ. தொகுதிகளை பொறுத்தவரை, ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமி மனைவி அனிதா வெற்றி பெற்றுள்ளார். ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியமேகவுடா வெற்றி பெற்றுள்ளார். ஷிமோகா மக்களவை தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
0 Comments