வீட்டில் கழிவறை கட்டித்தருவதாக கூறி ஏமாற்றிய தந்தை மீது காவல்நிலையத்தில் ஆம்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி புகார் அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடராஜபுரம் பகுதியைச் சேரந்த் எஹசானுமல்லா, மெஹ்ரீனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டில் கழிவறை இல்லாத நிலையில், விரைவில் கழிவறை கட்டித்தருவதாக எஹசானுமல்லா தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக உணர்ந்த 7வயது சிறுமி, தாயுடன் சென்று அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் முதல் மதிப்பெண்கள் எடுத்தால், கழிவறை கட்டித்தருவதாக தந்தை கூறியதாகவும், ஆனால், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என்றும் புகாரில் சிறுமி கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர் வளர்மதி அறிவுறுத்தலின் பேரில் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் கழிவறை கட்டும் பணியை தொடங்கவுள்ளனர்.
0 Comments