சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்குகள் விசாரணை விவகாரத்தில், டிஎஸ்பி காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதிகாரரீதியாக தன்னை பழிவாங்கும் நோக்கில் தான் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தம்மை சஸ்பெண்ட் செய்ததாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும், உயர்நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தம்மையும் இணைக்கக் கோரி பொன்.மாணிக்கவேல் மனு செய்திருந்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இம்மனுக்களின் மீது இன்று விசாரணை நடத்தினார்.
அப்போது, "சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பொன்.மாணிக்கவேல் தரப்பில் திடுக்கிடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, காதர் பாஷாவின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6 - ஆம் தேதிக்குள் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments