Tamil Sanjikai

கொலம்பியா நாட்டில் பொபையன் என்ற நகரில் சிறிய விமானம் ஒன்று திடீரென விபத்துக்குளாகி அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 9 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

விமானத்தில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானத்தில் பயணித்த ஒன்பது பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும், குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் விமானம் விழுந்த வீட்டில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment