Tamil Sanjikai

சிறு-குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தமிழகத்தில் 73 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு. 6 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 73 லட்சத்து 40 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள்.

தமிழகத்தில் 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேளாண் கணக்கெடுப்புப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்து இருப்பவர்கள் 73.4 லட்சம் பேர். இதில் 62 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகள் 1 ஹெக்டேர் வரை மற்றும் அதற்கும் குறைவான நிலம் வைத்துள்ளனர்.

11 லட்சத்து 19 ஆயிரம் விவசாயிகளிடம் 1 முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. விவசாய நில விவரமும், வங்கிக்கணக்கும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் எளிதில் பயன் பெறுவார்கள்.

0 Comments

Write A Comment