தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த முன்பதிவில்லாத தினசரி ரயில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்டு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் இன்று முதல் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை சென்ற அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரவு 11.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த அந்தியோதியா ரயல், நாகர்கோவில் மறுநாள் மதியம் 2.20 மணிக்கு சென்றடையும்.இதே போல், நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. .
0 Comments