அணு ஆயுதங்களை தாங்கி 4000 கிலோமீட்டர் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய அக்னி-4 ஏவுகனை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இருபது மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி-4 ஏவுகனை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். ஏற்கனவே அக்னி-4 ஏவுகனை கடந்த ஜனவரி 2ம் தேதி பரிசோதனை செய்துப் பார்க்கப்பட்டது. அந்த வகையில் நேற்று இந்த ஏவுகணை 7ஆவது முறையாக பரிசோதனை செய்துப்பார்க்கப்பட்டது.
ஐந்தாவது தலைமுறை கணிணி தொழில்நுட்பம், இடைமறிப்பு ஏவுகனைகளை தகர்ப்பது, வழிகாட்டு தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தற்போது இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் தீவின் ஆராய்ச்சி மையத்தில் அக்னி-4 ஏவுகனையை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்தனர். ஏவுகனையின் அனைத்து செயல்பாடுகளும் ரேடார் மூலமாக கண்காணிக்கப்பட்டன.
0 Comments