ஹமாஸ் போராளிகள் நடத்திய சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளது.
காசா முனையில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் போராளிகள் தங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், அதற்கு பதிலடியாக காசா முனையில் உள்ள ஒரு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தில் தான் ஹமாஸ் குழுவினரின் சைபர் குழுக்கள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, சைபர் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட இணையதளமும் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
உலகிலேயே சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ தாக்குதல் நடைபெற்றது உலகிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments