இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டிரன்ட் பிரிட்ஜில் நேற்று நடைபெறவிருந்த ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய ஆட்டம், டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், மழை காரணமாக ரத்தாகும் நான்காவது ஆட்டம் இதுவென்பதும், மழை காரணமாக, தொடர்ந்து போட்டிகள் கைவிடப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments