ராபர்ட் பிங்க் என்ற அந்தப் பேராசிரியர், மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1969-ம் ஆண்டு பட்டம் பெற்றார். அதற்கு வாழ்த்து தெரிவித்து அவரது குடும்ப நண்பர்கள் அனுப்பிய தந்திதான் இவ்வளவு ஆண்டுகள் கழித்து அவர் கையை வந்து அடைந்திருக்கிறது.
வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் மூலமாக இந்த தந்தி அனுப்பப்பட்டுள்ளது தந்தி அது. வேடிக்கை என்னவென்றால், கடந்த 2006-ம் ஆண்டிலேயே இந்நிறுவனம் தந்திச் சேவையை நிறுத்திவிட்டது.
உண்மையில், பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் ராபர்ட் 3 நண்பர்களுடன் ஆன் அப்ரார் நகரில் தங்கியிருந்த அறைக்கு அந்தத் தந்தி விரைவாக வந்து சேர்ந்துவிட்டது.
அதற்கு முதல்நாள்தான் அவர் அறையைக் காலி செய்துவிட்டு, நியூயார்க்கில் உள்ள கல்லூரிக்குப் போய்விட்டார்.
தற்போது அந்த அறை, ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் அலுவலக அறையாகி இருக்கிறது. அதன் பழைய கோப்பு அலமாரியின் கடைசி அடுக்கை சமீபத்தில் கிறிஸ்டினா ஸாஸ்க் என்ற பெண் சுத்தம் செய்தார்.
அப்போது உள்ளே விழுந்து கிடந்த ஒரு ‘துண்டுச் சீட்டை’க் கண்டார். அது ஒரு பழைய தந்தி போலத் தெரியவே, கையில் எடுத்திருக்கிறார்.
‘‘இதுவரை தந்தியைப் பெற்றிராத நான், ஒரு தந்தி எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆர்வத்தில்தான் அதை எடுத்தேன்’’ என்றார் அவர்.
அதில் ராபர்ட் பிங்கின் முகவரியைப் பார்த்த அவர், இணையத்தின் வழியாக அவரைக் கண்டுபிடித்து அவரது தற்போதைய முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.
ராபர்ட் தற்போது ராச்செஸ்டரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். 50 ஆண்டுகள் கழித்து அவருக்கு தந்தி கிடைத்திருந்தாலும், அதைப் பெற்றதில் தனக்கு மகிழ்ச்சியே என்கிறார்.
இந்தத் தந்தி, தனது பழைய நினைவுகளைக் கிளறிவிட்டதாகவும், அந்நாளைய தொடர்புகளை நினைவுகூர வைத்ததாகவும் அவர் கூறினார்.
0 Comments