இன்று தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கும்ட்லான் கிராமத்தில் பயங்கரவாதிகளால் அரசு பள்ளி கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் இன்று ( சனிக்கிழமை) மாணவர்களுக்கான போர்டு தேர்வுகளை நடத்தவிருந்தது. இந்நிலையில் பள்ளி கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளது.ஏற்கனவே கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றை பயங்கரவாதிகள் எரித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments