Tamil Sanjikai

கொட்டும் மழையையும் பாராமல் தனது கடமையை கண்ணும் கருத்துமாக பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவரை சமூக ஊடகங்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி நகரில் நேற்று மாலை முதல் கடுமையான மழை கொட்டித்தீர்த்தது.

அப்போது போக்குவரத்து அதிகம் நிறைந்த கவுகாத்தியின் பஸிஸ்தா பகுதியில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் , குடை, ரெயின் கோட் என எந்தவித தடுப்பு உபகரனங்களுமின்றி காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். மிதுன் தாஸ் என்ற 26 வயதே ஆன இளைஞரான அந்த காவலர்,

பஸிஸ்தா காவல்நிலையத்தைச் சேர்ந்த இவர்.தனது பணியின் மகத்துவத்தை உணர்ந்தவராக, மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக்கொண்டிருந்தது அந்த வழியாக வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்தவர்களை மயிர்கூச்சரியச் செய்தது.

அந்த வழியாக காரில் பயணித்த ஒருவர் காவலர் மிதுன் தாஸ் மழைக்கு நடுவே நேர்மையுடன் பணியாற்றிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் படம் பிடித்து அதனை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அஸாம் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

ஒரே இரவில் காவலர் மிதுன் தாஸ் அஸாமில் பிரபலம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment