Tamil Sanjikai

பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து பேசினார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.79 கோடியில் இருந்து 6.68 கோடியாக அதிகரித்து உள்ளது. 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

* வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியில் இருந்து 12 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

* வருமான வரி விலக்கில் தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.

* நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

0 Comments

Write A Comment