கூகுள் அதன் பண பரிவர்த்தனை தளமான கூகுள் பேவில் ஒரு புதிய அம்சத்தை சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இது பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை மிகவும் வெளிப்படையானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்று தெரிவித்துள்ளது.
கூகுள் பே இப்போது பயனர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பரிவர்த்தனை செய்யும் போது செயலி மூலம் மட்டுமே தகவலை தெரியப்படுத்தும். ஆனால் தற்போது ஒவ்வொரு முறை பண பரிவர்த்தனை நடைபெறும் போதும் ஒப்புதலை பெற எஸ்எம்எஸ் மூலமும் தகவலை தெரியப்படுத்த முடிவு செய்துள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
பயனர்களின் நிதி பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க, கூகுள் பே இயந்திர கற்றல் அடிப்படையிலான மோசடி தடுப்பு மாதிரியையும் பயன்படுத்துகிறது. ஒரு பயனர் தங்கள் தொடர்புகளில் சந்தேகத்திற்கிடமான அல்லது இல்லாத ஒருவரிடமிருந்து கோரிக்கைளைப் பெற்றால் அது "வெளிப்படையான மோசடி" என எச்சரிக்கைகளைக் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments