Tamil Sanjikai

வசந்த பாமாதேவி என்ற இயற்பெயா் கொண்ட காஞ்சனா ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். 1960 மற்றும் 70 களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் காஞ்சனா. இயக்குனர் சி. வி ஸ்ரீதர் பயணித்த விமானத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய காஞ்சனாவை தான் இயக்கிய "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். பின்னர், இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார் .

இவரின் படங்களில் சாந்தி நிலையம், நான் ஏன் பிறந்தேன், அதே கண்கள், காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட படங்கள் இன்றளவும் அனைவராலும் நினைவு கூறத்தக்கவை.

மேலும் இவர் 2016ல் 'ஓலபீப்பீ' என்கிற மலையாள திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதை பெற்றிருந்தார். இந்நிலையில், கேரளாவில் தனது இளைய மகனுடன் வசித்து வந்த கஞ்சனா நேற்றிரவு (மே30) மரணமடைந்தார். பிரபல நடிகையின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment