Tamil Sanjikai

பாகிஸ்தான் நிகழ்ச்சியின் போது காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை கைது செய்து அவர் மீது தேச துரோக சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ராவி ஆற்றங்கரையில் உள்ள கர்தாபூர் குருநானக் குருத்துவாராவுக்கு இந்தியாவில் இருந்து சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் கர்தாபூரில் நடைபெற்றது. இதில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளரும், பாகிஸ்தான் சீக்கிய குருத்துவாரா பிரபந்த கமிட்டி பொதுச்செயலாளருமான கோபால் சிங் சாவ்லாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்த சித்து பாகிஸ்தானில் அன்பு மழையில் நனைந்தேன். ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டன. அதில் சாவ்லா யார்? சீமா யார் என்பது எனக்கு தெரியாது’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment