ஆந்திராவில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலன் அடையும் வகையில், 'ஒய்.எஸ்.ஆர்., வாகன மித்ரா' திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று துவங்கி வைத்தார்.
இதன் மூலம், சுய தொழில் புரியும், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு, மாநில அரசின் சார்பில் 10,000 ரூபாய் இலவசமாக வழங்கப்படும். இதை அவர்கள் தங்கள் வாகனங்களை பழுது பார்க்கவும், இன்சூரன்ஸ் தொகை செலுத்தவும் பயன்படுத்தலாம் என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments