Tamil Sanjikai

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி சர்ச் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய இந்த மனிதாபிமானமற்ற, கொடூரமான தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தார்கள்.

இதன் பின்னர் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இடையே தளர்வுகள் நீக்கப்பட்டு மீண்டும் அவசர நிலை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டதுடன், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு, நேற்றிரவுடன் இந்த அவசரகாலச் சட்ட நீட்டிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை கிடையாது என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment