Tamil Sanjikai

கன்னியாகுமாி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் இரணியலும் ஒன்று. இப்பகுதியில் 8-ம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் மன்னர் காலத்தில் அழகிய வடிவில் அரண்மனை கட்டப்பட்டது. இது நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் வழியில் தக்கலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ளது. இரணியல் அரண்மனை, இந்தப்பகுதி மக்களால் சேரமான் பெருமாளின் செல்லக் கொட்டாரம் என்றே அழைக்கப்படுகிறது. மன்னர் பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு இந்தப்பகுதியை ஆட்சி செய்ததால் இந்தப் பகுதிக்கு இரணியல் என்று பெயர் வந்ததாக இந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!

கடைசிக்காலத்தில் குலசேகர ஆழ்வார் தங்கியிருந்த அரண்மனை என்றும் சிலர் சொல்கிறார்கள். இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை போல மரத்தாலானது. பின்னாளில் ஓட்டால் வேயப்பட்டது.

இந்த அரண்மனை சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 3 பகுதிகளாக கட்டப்பட்டது. முன்பக்கம் முகப்பு வாசலுடனும், நடுப்பகுதி கூட்டு முற்றத்துடனும், மாட மாளிகைகளுடனும் பல்வேறு அறைகளும், அமைந்துள்ளது. அரண்மனை கட்டிடத்தோடு இல்லாமல் தனியாக அமைந்துள்ள ஒரு சதுர வடிவிலான ஒரு பெரிய அறை இருக்கிறது. அதைச் சுற்றிலும் காற்று வருவதற்கு வசதியாக மரத்தில் செய்யப்பட்ட அடைப்புச் சுவர்கள். அறையின் நடுவில் உயர்ந்த பீடம், அதன் மேல் தான், ஒரே கல்லினால் ஆன பளிங்கு கட்டிலும் உள்ளது. இக்கட்டிலில் படுத்தால் அனைத்து நோய்களும் தீரும் என மக்களிடையே நம்பிக்கை உள்ளது. கட்டில் பீடத்தில் நான்கு தூண்கள், தூண்களின் மேல் கூரை, கூரையைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பூவேலைப்பாடுகள் இன்றும் தெளிவாகக் காட்சியளிக்கிறது.

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!

அரண்மனை உட்பகுதியில் இருந்து திருவிதாங்கோடு அரண்மனைக்கு சுரங்கப்பாதை செல்லும் சுரங்கப்பாதை தற்போது முற்றிலுமாக அழிந்து காணப்படுகிறது. இரணியல் அரண்மனையைப்பற்றி பொதுவாக தெளிவான சித்திரங்கள் இல்லை. இது நூறுவருடம் முன்பே கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்திரம் கிடைப்பதுவரை திருவிதாங்கூர் அரசு இதைபராமரித்து வந்தது . இரணியல் பண்டைய காலத்தில் முக்கியமான இடமாக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அரண்மனை முழுவதும் காடுபிடித்துக் கிடக்க அதன் நடுவே இடிந்து சரிந்து பாழடைந்து கிடக்கிறது பெரிய கட்டிடம் . இரணியல் அரண்மனை பற்றி விசாரித்தாலும் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகள் பொதுவாக அங்கே போவதும் இல்லை.

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்றாக இருந்த இரணியல் அரண்மனையை எடுத்துக் கொள்ள கேரள அரசு விரும்பியது . அனால் தமிழக அரசு கொடுக்க மறுத்துவிட்டது . வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையில் பல ஆண்டுகளாக எவ்வித பராமாிப்பு பணியும் செய்ய வில்லை. இதனால் இந்த அரண்மனை சமீபகாலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதுடன், விலை உயர்ந்த மரச்சாமான்கள், விளக்குகள் மற்றும் மன்னர் காலத்திலுள்ள போர் படை தளவாட பொருட்கள் களவு போய்விட்டன. அதோடு அரண்மனையின் மேல் கூரைகள் கடுமையாக சேதமடைந்து, திறந்தவெளி கட்டிடமாக காட்சி அளிக்கிறது.

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!

அரண்மனையின் பூமுகத்தில் கருங்கல்லால் ஆன அஸ்திவாரம் மட்டுமே மீதி உள்ளது . உள்ளே உள்ள கட்டிடத்தில் கூரையே இல்லை. மிகப்பெரிய தேக்கு உத்தரங்கள் வெறித்து துருத்தி நிற்கின்றன. சுவர்கள் முழுக்க செடிகள் முளைத்திருக்கின்றன. மாடிக்கு போகும் படிகள் உடைந்து கிடக்கிறது. நூறாண்டுகளாக மாறாத நீரோடு வெளியே ஒரு இடிந்த குளம் இருக்கிறது .

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!

இரணியல் அரண்மனையின் கலை பொக்கிஷங்கள் அழியாமல் இருக்கவும், புனரமைக்கவும், அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரணியல் சுற்று வட்டார பொதுமக்கள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாாிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இன்னும் எந்த பயனும் ஏற்படவில்லை.

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பிாின்ஸ் எம்எல்ஏ பேசுகையில், இரணியல் அரண்மனையின் தற்போதைய அவலநிலை குறித்தும், அதனை பராமாித்து நினைவு சின்னமாக்கி சுற்றுலா தலமாக்க அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அன்றைய முதல்வரான ஜெயலலிதா, இரணியல் அரண்மனைக்கு 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறினார். ஆனால் இதுவரைக்கும் பணி எந்தப் தொடங்கப்படவில்லை. இரணியல் அரண்மனை காட்சி பொருளாகவே தற்போதும் உள்ளது. ஒவ்வொரு நாளும், தேய்ந்து அழிந்தும் கொண்டு இருக்கிறது.

அழிந்துக்  கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை!

0 Comments

Write A Comment