ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில தேர்தலில் வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த 7-ஆம் தேதி தெலங்கானா மாநில பொதுத்தேர்தலில் தனது பெயர் வாக்காளர் பெயர்ப் பட்டியலிலேயே இல்லை என பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஜுவாலா கட்டா சமூக வலைதளத்தில் உருவாக்கிய #WhereisMyVote என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதே ஹேஷ்டேக்கைப் பின்பற்றி தெலங்கானாவைச் சேர்ந்த மக்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் புகார் அளிக்கத் தொடங்கினார்கள். தெலங்கானாவில் மட்டும் சுமார் 8 சதவிகித மக்களின் பெயர் வாக்காளர்கள் பெயர்ப் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 2.8 கோடி வாக்காளர்களில் சுமார் 22 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார். தெலங்கானா மக்கள் பலரும் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் ஓட்டளிக்க முடியவில்லை என வருத்தப் பட்டுள்ளனர்.
0 Comments