Tamil Sanjikai

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,300 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன என்றும், புலிகளைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை வலியுறுத்தியுள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சட்டவிரோதமாக கடத்தப்படும் 120-க்கும் மேற்பட்ட புலிகள் கைப்பற்றப்பட்டுள்ளது; அவற்றில் ஒவ்வொரு வாரமும் இரண்டுக்கும் மேற்பட்ட புலிகள் கடத்தப்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும் . புலிகள் பாதுகாப்புக் குழுமம் 2000-ம் ஆண்டு முதல், சட்டவிரோதமாக புலிகளை கடத்துவோர் மீது எச்சரிக்கை விடுத்து வந்துள்ளது.

1900-ஆம் ஆண்டில், 1 லச்சத்திற்க்கும் மேற்பட்ட புலிகள் பூமியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2010-ஆம் ஆண்டில் உலகளவில் 3,200 புலிகள் மட்டுமே உயிருடன் இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் புலிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் அறிக்கை ஆசிரியர் கனிதா கிருஷ்ணசாமி, புலிகளின் எண்ணிக்கையை ஆழமாக ஆராய்ந்து வருகிறோம் என்று கூறினார்.

" சட்டவிரோதமான இந்த கடத்தலில், புலியின் பாகங்களான புலித்தோல்கள், உயிருள்ள மற்றும் இறந்த முழுப் புலியின் உடல், மற்றும் புலியின் எலும்புகள் அதிக எண்ணிக்கையில் கடத்தப்படுவது தக்க ஆதாரங்களாகும்" என்று கனிதா கிருஷ்ணசாமி கூறினார்.

"இதைப்பற்றி பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது; இனிவரும் புலிகளின் இழப்பைத் தடுக்க தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புலியின் உடற்பகுதிகளில் பெரும்பாலும் கைப்பற்றப்பட்டவைகளில் தோல்களே அதிகம் என்றும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58 முழுப் புலித் தோல்கள் கைப்பற்றப்படுகின்றன என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment