Tamil Sanjikai

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அறிவித்தபடி குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம் கூறியதாவது, ஏழைக் குடும்பங்களுக்கு 72 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும்.

இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். முறைகேடுகளைத் தடுக்க ஏழைகள் அடையாளம் காணப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும். ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தால் இந்தியாவில் சுமார் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும்” என்றார்.

0 Comments

Write A Comment