Tamil Sanjikai

திருச்சியில் இளைஞர் ஒருவரை சக நண்பர்கள் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் - கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் தமிழழகன் (24). கடந்த 7ம் தேதி தனது நண்பர் காக்கா கார்த்தி மற்றும் நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்வதற்காக அவரது தாயிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

சினிமாவுக்குச் சென்ற தமிழழகன் இரண்டு நாட்களாகியும் திரும்ப வரவில்லை, செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தனது உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்த சண்முகநாதன், இது தொடர்பாக கடந்த 9ஆம் தேதி சண்முகநாதன் தனது மகனை காணவில்லை எனக திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் மனு அளித்தார். அதற்கு கண்டோன்மெண்ட் காவல்துறையினர் இது எங்களது எல்லைக்கு உட்பட்டு இல்லை என்றும் நீங்கள் பொன்மலை காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

அன்றே பொன்மலை காவல் நிலையத்துக்கு சென்று புகார் மனு கொடுத்துள்ளனர். அப்போது சண்முகநாதன் மகன் தமிழழகன் மீது கத்தியால் தாக்கியதாக பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கு ஓன்று உள்ளது. அதனால் எங்கேயாவது தலைமறைவாக இருந்திருப்பார் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். 9ம் தேதியிலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக காவல் நிலையத்தில் சென்று தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு பெற்றோர்கள் கூறி வந்துள்ளனர். ஆனால் போலீசார் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து சண்முகநாதன் கடந்த 25ம் தேதி துணை கமிஷனரிடம் தனது மகன் தமிழழகனை காணவில்லை என புகார் கொடுத்தார்கள்.

இதற்கிடையில் காக்கா கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ டிரைவர் ஜெகன் ஆகிய மூன்று பேரும் மதுபான பாரில் மது அருந்தும் போது மதுபோதையில் ஒருவருக்கொருவர் தமிழழகனை எரித்து கொண்டதை பற்றி உளறி கொண்டுள்ளனர்.

இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் இவர்கள் மூன்று பேரையும் பிடிப்பதற்காக சென்ற போது, மணிகண்டன், காக்கா கார்த்தி இருவரை மட்டுமே போலீசார் பிடித்துள்ளனர். ஆட்டோ டிரைவர் ஜெகன் போலீசாரிடம் இருந்து தப்பியுள்ளார். சமீபத்தில் திருச்சிக்கு வந்த டிஜிபி திரிபாதி அதிகாரிகளுடனான கூட்டத்தில் எந்த ஒரு புகார் என்றாலும் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment