Tamil Sanjikai

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 91 புள்ளி 3 சதவிகிதம் மாணவமாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 93.64 சதவிகிதம் பேர் மாணவிகள் என்றும், 88.57 சதவிகிதம் பேர் மாணவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 91.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை முறையே திருப்பூர், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய கல்வி மாவட்டங்கள் பிடித்துள்ளன. அதன்படி, திருப்பூர் மாவட்டம் 95. 37 சதவிகிதமும், ஈரோடு மாவட்டம் 95. 23 சதவிகிதமும், பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in என்ற இணையதளத்திலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment