Tamil Sanjikai

போலி மருத்துவப் படிப்பு சான்று வழங்கி சென்னையில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் பணிக்குச் சேர்ந்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ரேச்சல் ஜெனிபர். இவர் மீது 108 அவசர ஊர்தி நிர்வாகம் சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் போலி மருத்துவச் சான்றிதழை அவர் கொடுத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இதை அடுத்து அவரது செல்போன் எண் மூலம் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதால், தலைமறைவாகியுள்ள ஜெனிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 Comments

Write A Comment