தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் தொடர்ச்சியாக தவில் இசைத்து புதிய உலக சாதனை புரிந்து, ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் ராமசாமி என்பவர்.
விருதுநகரை சேர்ந்த ராமசாமி. இவர் தவில் கலைஞராக கடந்த 40 வருடமாக இருந்து வருகிறார். இவருக்கு தவில் இசைப்பதலில் இருந்த ஆர்வம், உலக சாதனை செய்ய தூண்டியது அதன் விளைவாக அவர் தொடர்ந்து 6 மணி நேரம் தவில் இசைத்து உலக சாதனை புரிந்துள்ளார்.
இந்த உலக சாதனை முயற்ச்சியை இன்று காலை காலை 7.05 மணிக்கு தொடங்கி மதியம் 1.05 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் தொடர்ந்து தவில்லில் மங்கள இசை இசைத்து உலக சாதனை படைத்து ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்துளார்.
இந்த சாதனை நிகழ்த்திய இவரைப் பற்றி ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் புத்தகத்தின் ஒருங்கிணப்பாளர் கூறும் பொது, இந்த சாதனை இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை முதலில் இவர் 5 மணி நேரம் செய்வதாக இருந்தது. பின்பு தொடர்ந்து 6 மணி நேரம் இசைத்து உலக சாதனை படைத்துள்ளார் என்றார். இந்த சாதனைய நிகழ்த்தியதற்க்கு ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் சார்பாக சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது
0 Comments