அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் எதிரொலியாக, கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று, சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்து 40,268 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. குறிப்பாக, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 166 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 12,089 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் இந்தளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments