பாகிஸ்தானில் வசிக்கும், அப்பாவி ஏழை கிறிஸ்தவ சிறுமிகளை, திருமணம் என்ற போர்வையில் சீனாவிற்கு கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக, அதிர்ச்சி புகார் எழுந்திருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் , ஏழைகள். இவர்களை குறிவைத்து, பாகிஸ்தானில் உள்ள புரோக்கர்களின் உதவியோடு, வருகை புரியும் சீன புரோக்கர்கள், இவர்களிடம் தந்திரமாக பேசி ஏமாற்றுகின்றனர்.
ஏழை கிறிஸ்தவ சிறுமிகளை குறிவைக்கும் இந்த புரோக்கர்கள், சீன இளைஞர்கள் மதம் மாறி, இவர்களை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் எனக்கூறி, பணத்தை கொடுத்து ஏமாற்றுகின்றனர்.
பின்னர், 16, 17, 18 வயதுள்ள சிறுமிகளை மணந்து, அவர்களை சீனாவிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் தள்ளி வாழ்க்கையை சீரழிக்கின்றனர்.
எளிதில் நகரப்பகுதிகளை அணுக முடியாத, கிராமங்களில் சிறுமிகளை தங்கவைத்து, அடைத்து கொடுமைப்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமையும் அரங்கேற்றப்படுகிறது.
இந்த பேரவலத்தில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்த சிறுமி ஒருவர், பாகிஸ்தான் திரும்பிய நிலையில், மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
0 Comments