Tamil Sanjikai

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த இளம்பெண்களை இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தி மறியல் செய்ததாலும் போலீசார் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முன்வராததாலும் அவர்கள் திரும்பி சென்றனர்.

மண்டல பூஜைகளுக்காக கடந்த மாதம் சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சென்று வழிபாடு நடத்திவருகின்றனர். இளம்பெண்கள் சபரிமலை வந்தால் அவர்களை தடுத்து நிறுத்த ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் தயாரானதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சபரிமலை பகுதிகளில் 144தடை உத்தரவு பிறப்பித்த்து. இந்நிலையில் ஞாயிறன்று சென்னையில் இருந்து மனிதி என்ற அமைப்பை சேர்ந்த சில இளம் பெண்கள் சபரிமலை செல்ல பம்பையில் இருந்து மலையேர தொடங்கினர்.

ஆனால் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திய ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர், தொடர்ந்து அவர்கள் செல்லவிடாமல் தடுத்து போராட்ட்த்தில் ஈடுப்பட்டனர். போராட்டம் தீவரமடைந்த்தை தொடர்ந்து போலீசாரின் அறிவுரையின் பேரில் சென்னை பெண்கள் திரும்பி சென்றனர். மேலும் கடந்த திங்கட்கிழமை, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து என்பவரும், மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்க்கா என்பவரும் காவல்துறை பாதுகாப்போடு மலை ஏற தொடங்கினர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரின் போராட்டம் தீவிரமானதால் சபரிமலை சன்னிதானத்துக்கு 2கிலோமீட்டர் முன்பாக உள்ள அப்பச்சி மேடு என்னும் இடத்தை தாண்டி அவர்களால் முன்னேர முடியவில்லை. எனவே இரண்டு பெண்களும் காவல்துறை பாதுகாப்போடு திரும்பி அனுப்பபட்டனர். இந்த நிகழ்வுகளால் சபரிமலையில் மீண்டும் பத்ற்றமான சூழல் உருவாகியுள்ளது. மண்டல பூஜை காலத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிக எண்ணிக்கையிலான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment