Tamil Sanjikai

புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னையில் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. ஐராவதம் மகாதேவன் கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டவர். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும், திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவினை சொன்னவர். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது. 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் கடந்த 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர் ஐராவதம் மகாதேவன். தமிழ்பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்துள்ள இவர் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை நடத்தி வந்துள்ளார்.

0 Comments

Write A Comment