தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக பாஜக தலைவர் அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை மற்றும் கோவையிலும் பாஜக வேட்பாளர்கள் எச். ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார்.
தொடர்ந்து 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments