சிரியாவின் வடக்கு எல்லையில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து, சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையிலான குழு, துருக்கி புறப்பட்டு சென்று, அந்தக் குழு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து குர்துக்கள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்தியது.
இதன் காரணமாக அந்நாட்டின் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சண்டை முடிவுக்கு வந்திருப்பதால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப், துருக்கி அதிபர் தயீப் எர்டோகனை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
0 Comments