அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிதீவிர புயலான டொரியன், வருகிற திங்கட்கிழமை புளோரிடாவில் கரையை கடக்கும் என்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அம்மாநில ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலாந்து நாட்டிற்கு செல்லவிருந்த டிரம்ப், புயல் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
0 Comments