Tamil Sanjikai

தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரைக்கும் இல்லை. அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும், வவ்வால் கடித்த பழத்தை சாப்பிடுவதால் நிபா வைரஸ் உருவாகிறது. இதனால் பொதுமக்கள் பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு அதை தண்ணீரில் நன்கு கழுவி சாப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறிப்பாக தமிழகத்தில் திருநல்வேலி கன்னியாகுமரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்து குழுக்கள் தயாராக வைத்துள்ளதாக கூறினார்.

முன்னதாக, கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் 004 - 24350496, 044 - 24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என என்று அறிவித்திருந்தது.

0 Comments

Write A Comment