நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை கண்காணிப்பது குறித்து சமூகவலைதள நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் சுனில் அரோரா.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களையோ, புகைப்படங்களை பதிவிட்டாலோ தாமாக நீக்குவது குறித்து சமூக வலைதளங்களின் இந்திய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் நாளை சமூக வலைதள நிறுவன நிர்வாகிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். ட்விட்டர், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்திக்கும் சுனில் அரோரா, அரசியல் கட்சிகளின் விளம்பரம், பரப்புரைகளை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டால் அதை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நீக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments