நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக தகவல் வந்தது. தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.
போலீசாருக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கிரைஸ்ட்சர்ச் பகுதிவாசிகள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்கவும், சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கிரைஸ்ட்சர்ச் போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேறு யாரேனும் உள்ளார்களா? என போலீசார் தேடி வருகின்றனர்.
இது போல் நகரில் பலவேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
2-வது துப்பாக்கிச்சூடு லின்வுட் புறநகர் பகுதி மசூதியில் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
துப்பாக்கி சூடு குற்றவாளி "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன் தெரிவித்து உள்ளான்.
வீடியோ கேம் போல் குற்றவாளி இந்த துப்பாக்கிசூட்டை நடத்தி உள்ளான். இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
0 Comments