ஜார்கண்ட் மாநிலத்தில் 81 வயது மூதாட்டி ஒருவர் மாணவர்களுக்கு முழுநேரமாக உடற்கல்வி பயிற்சி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.
சைபாசா கிராமத்தை சேர்ந்த இஷா கோஷ் என்ற அந்த மூதாட்டி, தினமும் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு உடற்பயிற்சிகளை அளித்து வருகிறார். உடற்பயிற்சி மூலம் தான் ஒழுக்கமான வாழ்க்கையை வாழமுடியும் என கூறும் இவர், தமது முதுமையையும் பொருட்படுத்தாமல் தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்கிறார்.
மாநில பாரத சாரணர்கள் அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கும் இஷா கோஷ், பல ஆண்டுகளாக ஏராளமான மாணவர்களுக்கு மனஉறுதி மற்றும் உடல் உறுதி சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறார்.
0 Comments