நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்பட விவகாரத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும் விவகாரத்தில்,பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்தரையன் முன்பாக முறையீடு செய்தார். அப்போது, சர்கார் சர்ச்சை தொடர்பான புகாரின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாசை போலீசார் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் அளிக்குமாறு கோரினார். நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் முறையிடப்பட்டது.
அதையடுத்து, இந்த முறையிட்டு மனுவாக தாக்கல் செய்யும் படியும் , நேரம் இருந்தால் மனுவை இறுதி வழக்காக விசாரணைக்கு எடுப்பதாகவும் நீதிபதி அனுமதித்தார். அதைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
0 Comments