மும்பையில் உள்ள பாந்த்ராவில் இன்று நண்பகலில் நடந்த தீவிபத்தினால் அறுபதுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
மும்பை பாந்த்ரா தீயணைப்பு நிலையத்துக்கு எதிரே உள்ள லால்மதி குடிசைப் பகுதியில் இன்று நண்பகலில் ஒரு வீட்டில் பிடித்த தீ காற்றின் வேகத்தினால் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும் வேகமாக பரவியதில் அறுபதுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாயின, தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் 12 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீப்பிடித்த செய்தியை அறிந்தவுடன் குடிசை வீட்டில் இருந்த அனைவரும் வேகமாக குடிசையை விட்டு வெளியேறியதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை .அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
0 Comments