ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் கண்காட்சிக்கு வரும். இந்த ஆண்டு தமிழ் பதிப்பகங்கள் முதன் முதலாக கண்காட்சிக்கு வந்துள்ளன. இதனால் தமிழ் வாசகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த 1982- ம் ஆண்டு தொடங்கப்பட்டு 37-வது ஆண்டாக நடக்கும் இந்த சர்வதேச புத்தகத் திருவிழாவில் முதன் முறையாக தமிழ் புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. மலையாளத்தில் ஷாபு கிளித்தட்டில் எழுதிய உமா பிரேமனின் வாழ்வியல் நாவலான நிலாச்சோறு புத்தகத்தை மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா “கதை கேட்கும் சுவர்கள்” என தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இந்த புத்தகத்தை சார்ஜா புத்தகக் கண்காட்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டார்.
0 Comments