டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட் ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னில் தற்போது அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மற்றும் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் விளையாடினர்.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்திற்கு பின் முதன்முறையாக இருவரும் விளையாடினர். நடப்பு சாம்பியனான ஜோகோவிச்சை முதல் இரு செட்களில் வீழ்த்தி வாவ்ரிங்கா அவற்றை கைப்பற்றினார்.
இந்த போட்டியில், 6-4, 7-5, 2-1 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா முன்னிலை பெற்றிருந்தபொழுது, இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் ஜோகோவிச் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் வாவ்ரிங்கா போட்டியில் வெற்றி பெற்றார்.
0 Comments